ஜெய்பீம் 'சூர்யாவுக்கு' நறுக்கென சில கேள்விகள் ! சமூக வலைதளங்களில் வைரல்!

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அதில் வன்னியர்களை நேரடியாக அந்த படக்குழு சீண்டியுள்ளது. இதனால் வடமாவட்டங்களில் சூர்யா ரசிகர் மன்றங்களை வன்னியர் இளைஞர்கள் கூண்டோடு கலைத்து வருகின்றனர்.

Update: 2021-11-05 10:38 GMT

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அதில் வன்னியர்களை நேரடியாக அந்த படக்குழு சீண்டியுள்ளது. இதனால் வடமாவட்டங்களில் சூர்யா ரசிகர் மன்றங்களை வன்னியர் இளைஞர்கள் கூண்டோடு கலைத்து வருகின்றனர்.

இதனிடையே சமூக வலைதளங்களில் வைரலாக ஒரு பதிவுகள் வலம் வருகிறது. அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஜெய் பீம் படம் பார்த்தேன்.. பிரமாதமான மேக்கிங்.. விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் #கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள்.. வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித்திரையில் காட்டி இருப்பதற்கு மிக்க நன்றி... எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள்.. அதற்காகவும் நன்றி... இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள்.. (இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது தனிக்கதை).. இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி... 


சரி விஷயத்திற்கு வருகிறேன்... உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்... அதே வேளையில் நிஜத்தில் எங்கள் சொந்தம் ராஜி கண்ணுவை மிக மிக கொடூரமாக அடித்துக்கொன்ற சப் இன்ஸ்பெக்டரின் பெயர் அந்தோணி சாமி .. அவர் கிறிஸ்தவர் (தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்).. ஆனால் திரைப்படத்தில் அவர் பெயரை குருமூர்த்தி என மாற்றி இருக்கிறீர்கள்.. அதோடு அவரை இந்து வன்னியராகவும் காட்டி இருக்கிறீர்கள்... அதேபோல எப்பொழுதும் நமச்சிவாய என சொல்லிக் கொண்டிருக்கும் வழக்கறிஞரை ஒரு சமூக கோமாளி போலவும் சித்தரித்து உள்ளீர்கள்... உங்களின் சூரரைப்போற்று திரைப்படமும் தொழிலதிபர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.. கோபிநாத் தெய்வ பக்தியுள்ள பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்.. ஆனால் படத்தில் அவரை பெரியாரியவாதியாக, கடவுள் மறுப்பாளராக காட்டியிருந்தீர்கள்..

அப்பாவி இந்து மதத்தின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்..? ஜெய்பீம் திரைப்படத்தின் இறுதியில் நீங்கள் நன்றி சொல்லி போட்டிருக்கும் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களாக வருகின்றன... நீங்கள் ஸ்டாலினை சந்திக்கும் பொழுது உங்களுடன் அம்மதத்தை சேர்ந்த பெரியவர்கள் இருந்தார்கள்.. இதெல்லாம் உங்கள் மீது பெருத்த சந்தேகத்தை வரவழைக்கிறது... ஏற்கனவே அப்பாவிகளான இந்துக்களை, குறிப்பாக எங்களைப்போன்ற இருளர், மீனவர், பறையர் போன்றோரை ஏதேதோ பொய் புரட்டுகளையும், ஆசை வார்த்தைகளையும் கூறி மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்... மதமாற்றத்தால் அகண்ட பாரத தேசம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் , இலங்கை என சிதறுண்டு கிடக்கிறது... இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் இந்துக்களையும் மதம் மாற்றிக்கொண்டு இருக்கும் சதிகாரர்களுடன் கைகோர்த்து, நீங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.. உங்கள் தந்தை எவ்வளவு பெரிய பக்திமான்.. நீங்கள் அவருக்கும் அவரது கொள்கைகளுக்கும் துரோகம் இழைப்பதாக தோன்றவில்லையா? இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமா ?உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா ?

நாங்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டாலும் எங்கள் கலாச்சாரத்தை விட்டு எப்பொழுதும் விலகியது இல்லை ... எங்களுக்கும் பலமுறை பண ஆசை காட்டி மதம்மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள் .. சிவபெருமானின் வாரிசுகளான இருளர்ளாகிய நாங்கள் அதற்கெல்லாம் அடிபணியவில்லை... எங்களை வழிநடத்த எங்கள் குலதெய்வம் இருக்கிறது... எங்கள் கலாச்சாரம் , எங்கள் வாழ்வியல் தான் எங்களுக்கு அடிப்படை.. அதை மாற்றிக் கொண்டால் எங்கள் இனமே அழிந்து விட்டதாக அர்த்தமாகிவிடாதா?

எப்போதாவது எங்காவது இந்துக்கள், மற்ற மதத்தினரை கத்திமுனையில் மதம் மாற்றியதாக வரலாறு உண்டா ? பணம் கொடுத்தோ மற்ற மத தெய்வங்களை சாத்தான் என இகழ்ந்து பேசியோ மதம் மாற்றியதாக கேள்வி பட்டதுண்டா? தான் உண்டு தன் வேலையுண்டு என இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் எங்களை, எங்கள் வழியில் நிம்மதியாக வாழ விடுங்கள்...

ஜெய்பீம்! ஜெய் ஹிந்த்!

இப்படிக்கு, இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த உண்மைத் தமிழன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: FB Post

Image Courtesy:The Hindu

Tags:    

Similar News