தென்தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்.!

கடந்த ஒரு சில வாரங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Update: 2021-03-24 07:44 GMT

தென்தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால், வெயிலால் ஏற்படும் சரும பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


 



இந்நிலையில், காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக நாளை முதல் 28ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். அதே போல் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை ஏற்படும்.




 


அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Similar News