தென்மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-23 03:43 GMT

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




 


இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



அதே போன்று வருகின்ற 25, 26ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற செய்தி மக்களை குளிர்வித்துள்ளது என்றே சொல்லலாம்.

Similar News