சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி அமைதி நிலவும் டிஜிட்டல் திரையில் மட்டும் அறிவிப்பு!

டிஜிட்டல் திரைகளில் அறிவிப்புகளை வெளியிடுவதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அறிவித்து இருக்கிறது.

Update: 2023-02-28 00:43 GMT

தமிழகத்தில் முதல்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று முதல் அமைதியாக காட்சி அளித்து வருகிறது. குறிப்பாக ரயில்கள் புறப்படும் மற்றும் வருகை நேரம் குறித்த தகவல்கள் ஒலிபெருக்க வாயிலாக அறிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரைகளில் மட்டுமே தகவல்கள் வெளியாக இருக்கிறது. சென்னையில் சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள் மிகப்பெரிய ரயில் நிலையங்களாக செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த ரயில்கள் மூலம் பல லட்சக்கணக்கான மக்களும் பயணித்து வருகிறார்கள். இந்த ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவார்கள். புறப்படும் ரயிலின் எண், சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் ஒலிபெருக்க வாயிலாக அறிவிக்கப்படும்.


வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் புறப்பட உள்ள ஊர் ரயில் என் வந்து சேரும் இடம் மற்றும் நடைமேடையின் போன்ற விவரங்களும் ஒலிபெருக்க வாயிலாக அறிவிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் தரை வாயிலாக இந்த அறிவிப்பு வழியாக தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. எனவே இதன் காரணமாக அமைதி நிலையமாக சென்ட்ரல் ரயில் நிலையம் காட்சி அளிக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News