திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு வசதியாக இன்று முதல் தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிரமமின்றி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சில நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.250 சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் 20 ரூபாய் கட்டணம் முறை ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் ரூ.100 கட்டணமும் பொது தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Tamilnadu Temples