தமிழகத்தில் நாளை முதல் 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!

தமிழகத்தில் பயணிகள் வருகை குறைவு காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்களின் சேவைகள் நாளை முதல் தொடங்குகிறது.

Update: 2021-06-19 06:56 GMT

தமிழகத்தில் பயணிகள் வருகை குறைவு காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்களின் சேவைகள் நாளை முதல் தொடங்குகிறது.




 


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உள்ளது. இது போன்ற சமயங்களில் இன்றும் பொதுபோக்குவரத்து தொடங்கப்படவில்லை, இதனால் வெளியூர்களுக்கு அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் ரயில்களில் மட்டும் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் காரணமாக வெளியூர் செல்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.




 


இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி செல்லும் 4 சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதேபோன்று சென்னை சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரம், ஆலப்புழா, மேட்டுப்பாளையம் செல்லும் 3 சிறப்பு ரயில்களும் நாளை இயக்கப்படுகிறது.

மேலும், கோவையிலிருந்து நாகர்கோவில், மதுரையில் இருந்து புனலூர் செல்லும் சிறப்பு ரயில்களும், திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயிலும் நாளை முதல் தனது சேவையை தொடங்குகிறது.

Similar News