ஆங்கிலப் புத்தாண்டு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் வழிபாடு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
ஆங்கில் புத்தாண்டு (2022) நேற்று நள்ளிரவில் பிறந்தது. இதனையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் காலை 3 மணிக்கு சிறப்பு மார்கழி பூஜை தொடங்கிய நிலையில் பெருமாளுக்கு ரத்ன அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர். இதனால் விடியற்காலை 5 மணி முதல் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மேலும், நண்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கான சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறியுள்ளனர்.
Source,Image Courtesy: Puthiyathalaimurai