ஊரடங்கு வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்கான சூழலை கண்காணித்து சூழலுக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்கான சூழலை கண்காணித்து சூழலுக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும்.
மேலும், வரக்கூடிய நாட்களில் சில கட்டுபாடுகள் வரும். இதனால் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.