தமிழகத்தில் ஜூனில் நடைமுறைக்கு வரும் 'ஸ்புட்னிக்' வி தடுப்பூசி.!

வருகின்ற ஜூன் முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாக தகவல் உள்ளது.

Update: 2021-05-28 08:17 GMT

வருகின்ற ஜூன் முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாக தகவல் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது.


 



இதற்கு அடுத்த படியாக ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் கடந்த 17ம் தேதி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிசோதனை முறையாக செலுத்தப்பட்டது. இதன் பின்னர் விசாகப்பட்டினத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 2வது வாரத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Similar News