ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை.!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது.

Update: 2021-07-06 04:13 GMT

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது.


ராமேஸ்வரத்தை சேர்ந்த 600க்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அப்போது பாரம்பரிய மீன்பிடி பகுதியான தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 8க்கும் அதிகமான ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தங்களுடைய நாட்டுக்கு சொந்தமான பகுதிகளில் எப்படி மீன்பிடிக்கலாம் என்று ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்து, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துளளனர்.


பல லட்சங்களை செலவு செய்து டீசல் போட்டு மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள், மீன் இல்லாமல் கரைக்கு திரும்புவது வேதனையாக உள்ளது எனக் கூறியுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்படை அட்டூழித்துக்கு முடிவு கட்ட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News