ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சினிமா படப்பிடிப்புக்கு வாடகை - ஸ்டூடியோ'வாகிப்போன ஸ்ரீ நித்ய கல்யாணி அம்மன் ஆலயம்
ஆகம விதிகளை மீறி கடையம் ஸ்ரீ நித்ய கல்யாணி அம்மன் கோவிலை சினிமா படப்பிடிப்பிற்கு வாடகை விடுவதால் அங்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர் மேலும் கோவில் கோவிலும் சினிமாக்காரர்கள் படப்பிடிப்புக்கு உபயோகப்படுத்துவதால் நாசப் பட்டு வருகிறது
ஆகம விதிகளை மீறி கடையம் ஸ்ரீ நித்ய கல்யாணி அம்மன் கோவிலை சினிமா படப்பிடிப்பிற்கு வாடகை விடுவதால் அங்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர், மேலும் கோவில் கோவிலும் சினிமாக்காரர்கள் படப்பிடிப்புக்கு உபயோகப்படுத்துவதால் பொலிவிழந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பழமையும், பெருமையும் வாய்ந்த மிக பிரபலமான ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் சித்தர்கள் வழிபாட்டிற்கும் பிரபலம், மகாகவி பாரதியார் போன்ற பல தலைவர்கள் இங்கு வழிபாடு நடத்தி பாடல்களை எழுதியுள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய சிவாலயங்களில் இது முக்கிய சிவாலயமாக கருதப்படுகிறது. இப்படி பழமையும், பெருமையும் வாய்ந்த சிவாலயத்தை கோவில் நிர்வாகிகள் படப்பிடிப்பிற்கு வாடகைக்கு விடுவது அங்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக இறை தரிசனம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சினிமாக்காரர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் கோவிலை நீங்கள் படப்பிடிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அங்குள்ள அதிகாரிகள் வாடகைக்கு விடுவதால் ஆகம விதிகளுக்குப் புறம்பாக பலர் அந்த கோவிலின் அருமை தெரியாது நடந்துகொள்கின்றனர். இதனால் அங்கு வரும் சாமி கும்பிட வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது கோவில் அமைப்பு, மேலும் சினிமா அரங்கம் அமைகிறேன் விளக்குகள் பொருத்தி, கண்ட இடங்களில் ஆணி அடிப்பது, சட்டம் அடிப்பது மரப்பலகை பொருத்துவது போன்ற பல வேலைகள் நடைபெறுவதால் பழமை வாய்ந்த கோவில் மேலும் சிதிலம் அடைகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்கள் முறையாக சாமி கும்பிட முடியாமலும் கோவில் இப்படி பாழாகிறது என மனவருத்தத்துடன் செல்கின்றனர்.
மேலும் அங்கு படப்பிடிப்பிற்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 வரை வசூலிக்க படுவதாக அங்குள்ள பக்தர்கள் கூறுகின்றனர். இது அறநிலையத்துறைக்கு கணக்கில் வருகிறதா அல்லது பெயருக்கு இரசீதில் குறைவான தொகையை கொடுத்துவிட்டு இந்த பணத்தை வாங்கிக் கொள்கிறார் எனவும் அங்குள்ள பொதுமக்களின் புலம்பலாக இருந்து வருகிறது. மேலும் கோவில் வெளிப்புறத்தில் மட்டுமல்லாது உட்புறத்திலும் விக்கிரகங்கள் இருக்கும் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் ஆகமவிதிகள் என்பதே அந்த கோவிலில் நிர்வாகிகளால் இல்லாமல் போய்விடுகிறது மேலும் இந்த படப்பிடிப்பு அடுத்த ஒரு வாரங்களுக்கு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கோவில்களை நாங்கள் பாதுகாக்கிறோம் எங்களைப் போல் யாரும் பாதுகாக்கவில்லை எனக்கூறும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு நடவடிக்கை எடுப்பாரா?' என இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதர் கேள்வி எழுப்பியுள்ளார்