முதியோர்களை அடித்து துன்புறுத்திய புனித ஜோசப் கருணை இல்ல கொடுமைகள் - பூட்டி சீல் வைத்த மாவட்ட நிர்வாகம்

சர்ச்சை புகார் எழுந்த வேலூர் கருணை இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-14 06:13 GMT

சர்ச்சை புகார் எழுந்த வேலூர் கருணை இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குகையநல்லூர் பகுதியில் ஆதரவற்ற முதியவர்களுக்கான புனித ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இல்லத்தில் ஏற்கனவே 2018-ல் அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் சீல்வைக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நான்காண்டுகளாக செயல்படாமல் இருந்த இல்லத்தை அதன் நிர்வாகி கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தை அணுகி மீண்டும் திறக்க உத்தரவு வாங்கினார். தற்பொழுது அந்த இல்லம் குறித்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு புகார் சென்றுள்ளது முதியவர்கள் அடுத்த துன்புறுத்தப்படுவதாக இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அங்கு ஆய்வு நடத்தி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடிக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய அரசு அதிகாரிகள் 69 முதியோர்களை மீட்டு மருத்துவமனைகளின் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து புனித ஜோசப் கருணை இல்லத்தை மீண்டும் பூட்டி சீல் வைக்கும் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவு தெரிவித்தார் அதன் அடிப்படையில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமையிலான அரசு அதிகாரிகள் கருணை இல்லத்திற்கு பூட்டி சீல் வைத்தனர். கருணை இல்லம் என்ற பெயரில் முதியவர்களை அடித்து துன்புறுத்திய விவகாரம் வேலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan 

Similar News