சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு 'நட்சத்திர காவலர் விருது' காவல் ஆணையர் தகவல்!
ஒவ்வொரு மாதமும் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு நட்சத்திர காவலர் விருது மற்றும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.;
ஒவ்வொரு மாதமும் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு நட்சத்திர காவலர் விருது மற்றும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டறியும் காவலர்களை பாராட்டும் விதமாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கூடுதலாக ஒரு மாதத்தில் சிறப்பான மற்றும் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றும் போலீசாரை தேர்ந்தெடுத்து நட்சத்திர காவலர் என்ற விருதை வழங்கி காவலர் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாதம் 5ம் தேதி தலைமையிட கூடுதல் ஆணையர் தலைமையிலான குழு, சிறப்பாக மற்றும் மெச்சும் வகையில் பணிபுரியும் காவலர்களை கண்டறிந்து பணி மதிப்பீடு செய்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai