சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இன்று மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை.!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இன்று மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை.!

Update: 2021-02-18 09:07 GMT

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் இன்று மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் காலம் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக தேர்தலை நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வருகிறது. அதே போன்று தமிழகத்தில் தேர்தல் நடத்துவது பற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு கடந்த 10ம் தேதி சென்னை வந்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாலை 4 மணிக்கு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஒரு சில வாரங்களில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் களம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Similar News