நாகை: மண்ணை தோண்ட தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்!

நாகப்பட்டினம் அருகே கோவில் சீரமைப்பின்போது மண்ணைத் தோண்டியுள்ளனர். அப்போது மிகவும் பழங்கால ஐம்பொன் சிலைகளும் பூஜைப் பொருட்களும் கிடைத்து வருவது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-26 11:01 GMT

நாகப்பட்டினம் அருகே கோவில் சீரமைப்பின்போது மண்ணைத் தோண்டியுள்ளனர். அப்போது மிகவும் பழங்கால ஐம்பொன் சிலைகளும் பூஜைப் பொருட்களும் கிடைத்து வருவது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ளது குலோத்துங்க சோழர் கால தேவபுரீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நவக்கிரக மண்டபம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது சிறியதும், பெரியதுமாக ஐம்பொன் சாமி சிலைகள் கிடைத்துள்ளன.

இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், மீண்டும் அந்த இடத்தைத் தோண்டத் தொடங்கியபோது, அடுத்தடுத்து 13 அம்பாள் சிலைகளும், திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனார் சிலை ஒன்றும் சங்கு, சூலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பூஜைப் பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு மேலும் தோண்டப்பட்டது. இதனால் இன்னும் பல சிலைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News