ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன், நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனை போக்கும் வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அந்நிறுவனம் முன்வந்தது. இதனால் தற்காலிகமாக அந்நிறுவனம் செயல்படுவதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கடந்த ஒரு சில வாரங்களாக ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட்டில் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தது. டேங்கர் லாரியில் இருந்து 4.82 டன் ஆக்சிஜனை அரசு மருத்துவமனைக் கிடங்கில் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
விரைவில் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை சரிசெய்வதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.