போலியான போராளிகளை உடனே கைது செய்: ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு பரபரப்பு புகார்!

Update: 2022-07-17 01:23 GMT

தூத்துக்குடியைச் சேர்ந்த ஹஸிமா என்ற வழக்கறிஞர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக எந்தவிதமான புற்றுநோய் உருவாகிறது? என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, காற்று மாசுபாட்டால் புற்றுநோய் எதுவும் உருவாகவில்லை என பதில் கொடுக்கப்பட்டுள்ளது.


இதனை எடுத்துக்கொண்ட ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பினர், கடந்த 2018ம் ஆண்டு காற்று மாசுபாட்டால் தூத்துக்குடியில் புற்றுநோய் ஏற்படுவதாக பொய்யான தகவலை சொல்லி அப்பாவி மக்களை மூளை சலவை செய்து தூண்டப்பட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மேலும், இந்த கலவரத்திற்கு காரணமான பேராசிரியர் பாத்திமா பாபு, நித்தியானந்தன் ஜெயராம், மெரினா பிரபு, குமரெட்டியாபுரம் மகேஷ், கிட்டு என்கின்ற கிருஷ்ணமூர்த்தி, ஹரிகரன், தெர்மல் ராஜா உள்ளிட்டோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனு தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News