சென்னையை நெருங்கும் புயல்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை.!

சென்னையை நெருங்கும் புயல்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை.!

Update: 2020-11-23 13:17 GMT

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 23ம் தேதி உருவாகும் என அறிவித்த நிலையில் அது நேற்றே உருவானது. இதன் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்தது. 

இந்நிலையில், நிவர் புயல் தமிழகத்தை நெருங்கும் சூழலில் தயார் நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். ‘நிவர்’ புயல் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதியம் 12.15 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள் நிவர் புயல் கரையை கடக்கும் உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக புயல் முன்னெச்செரிக்கை காரணமாக முதலமைச்சரின் அரியலூர், பெரம்பலூர் சுற்றுப்பயண தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நவம்பர் 25ம் தேதி சுற்று பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் நிவர் புயல் காரணமாக 27ம் தேதிக்கு சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கிறது. தீவிர புயல் கரையை கடக்கும்போது 89 முதல் 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் சேதங்கள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்காக புயல் தாக்கும் மாவட்டங்களில் முக்கிய அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Similar News