சென்னை அருகே கரையை கடக்கும் புயல்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆட்சியர் உத்தரவு.!

சென்னை அருகே கரையை கடக்கும் புயல்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆட்சியர் உத்தரவு.!

Update: 2020-11-22 14:43 GMT

நவம்பர் 25ம் தேதி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடப்பதால் கடலோர மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நவம்பர் 25ம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்றும், சென்னை- காரைக்கால் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுவதால் 24 மற்றும் 25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மழை பெய்யும் நேரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மீட்பு பணிகள் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போது சென்னையில் இருந்து 1000 கி.மீ தொலைவிலும் காரைக்காலில் இருந்து 700 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News