புயல் சேதம்.. மத்திய குழு தமிழகம் வருகை தற்காலிகமாக ஒத்திவைப்பு.!

புயல் சேதம்.. மத்திய குழு தமிழகம் வருகை தற்காலிகமாக ஒத்திவைப்பு.!

Update: 2020-12-01 19:41 GMT

தமிழகத்தில் நிவர் புயல் கடலோர மாவட்டங்களில் சேதங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதனால் வாழை, கரும்பு தோட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும் என அரசு கூறியிருந்தது. இந்நிலையில், நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட வருகை தர இருந்த மத்திய குழுவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 26ம் தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நவடிக்கைகாரணமாக உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.


இதனையடுத்து சேத மதிப்பை பார்வையிடுவதற்காக தமிழகத்திற்கு மத்திய குழு ஒன்று (1ம் தேதி) இன்று வருகை தருவதாக இருந்தது.
இதனிடையே வங்க கடலில் உருவாகி உள்ள மற்றொரு புயலால் மத்திய குழுவின் வருகை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News