புயல் சேதங்கள் .. மத்திய ஆய்வுக்குழுவினர் இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு.!

புயல் சேதங்கள் .. மத்திய ஆய்வுக்குழுவினர் இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு.!

Update: 2020-12-07 11:14 GMT

தமிழகத்தில் 2 புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வயல்வெளியில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், புயல் சேத விபரங்களைப் பார்வையிட வந்துள்ள மத்தியக் குழுவினரில் ஒரு குழுவினர் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், 2வது குழுவினர் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.


புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் தென் சென்னையிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஆய்வு செய்தனர். இதில் முதல் குழுவினர் இன்று காலை புதுச்சேரியில் ஆய்வை முடித்துவிட்டு, பிற்பகலில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.


பின்னர் இரவில் சென்னை, திரும்புகின்றனர். அதே போன்று 2வது குழுவினர் இன்று காலை வேலூர், மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, மாலையில் சென்னை திரும்புகின்றனர்.


அதன்பின்னர் இரண்டு குழுவினரும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அன்றைய தினம் மாலையே டெல்லி திரும்பும் மத்திய குழுவினர் தமிழக சேதம் பற்றிய அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குகின்றனர். இதன் பின்னர் தமிழகத்திற்கு நிதி உதவி பற்றி மத்திய அரசு ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
 

Similar News