திருவாரூரில் புயல் நிவாரண பணிகள்.. அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.!

திருவாரூரில் புயல் நிவாரண பணிகள்.. அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.!

Update: 2020-12-07 21:26 GMT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் நிவாரணப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை, கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் அன்பழகன் கூறியதாவது: மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில், தற்பொழுது பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய கணக்கெடுப்பின்படி 110346 விவசாயிகளின் 87510 ஹெக்டேர் பயிர்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 129564 நபர்கள் 160596 ஹெக்டேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். சம்பா, தாளடி, குறுவை பயிர்கள் மழை நீரால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு செய்யாத பயிர்களும் பயிர் பாதிப்பினை கருத்தில் கொண்டு கவலை கொள்ள தேவையில்லை அரசு அதற்குரிய நிவாரணத்தை வழங்கும்.
இந்த பாதிப்புகளை தொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. முழுமையாக கணக்கெடுப்பு பணி முடிந்த பின்பு எந்தவொரு விவசாயியும் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

Similar News