தகராறில் கம்பியால் குடும்பத்தையே வெளுத்த தி.மு.க இளைஞரணி செயலாளர் - ஃபுல் பார்மில் கழகம்

தெருக் குழாயில் தண்ணீர் குடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை கம்பியால் தாக்கிய தி.மு.க இளைஞரணி செயலாளர்.

Update: 2022-09-14 01:48 GMT

அருப்புக்கோட்டை அருகில் அமைந்துள்ளது தான் ஆத்திப்பட்டி என்ற ஒரு கிராமம். இங்கு தி.மு.க இளைஞரணி கிளை செயலாளர் முத்து ராமலிங்கம் இவர் அங்குள்ள பகுதியில் டாஸ்மார்க் பார் நடத்துகிறார். மேலும் இவருடைய குடும்பத்தினருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் மில் தொழிலாளர் ராமசாமி குடும்பத்தினருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. எத்தனையோ சினிமாக்களில் பார்த்து இருப்போம் தெரு குழாய்களில் தண்ணீர் பிடிப்பது என்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று.


அதே மாதிரி தான் இங்கும் இரண்டு வீட்டு அக்கம் பக்கத்தினரும் தண்ணீர் பிடிப்பதற்கு சென்று உள்ளார்கள். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வாய்த்தகராறு கை தகராறுகளாக மாறி இருக்கிறது. சமீபத்தில் தான் இவருடைய பக்கத்து வீட்டுக்காரரான ராமசாமி என்பவரின் மகளுக்கு திருமண நடந்து இருக்கிறது. மேலும் இவருடைய வீட்டில் அதிகமாக உறவினர்கள் வந்ததன் காரணமாக இவர் அதிகமாக தெருக் குழாய்களில் தண்ணீர் பிடித்துள்ளார்.


கூடுதலாக தண்ணீர் பிடித்த காரணத்தினால் இருதரப்பு பெண்களுக்கும் இடையே வாய் தகராறு முற்றியுள்ளது. உடனே தி.மு.கவை சேர்ந்த முத்துராமலிங்கம் அவரது குடும்பப் பெண்களுக்கு ஆதரவாக பேசி தனது பக்கத்து வீட்டுக்காரரான ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தை கம்பியால் தாக்கும் வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

Input & Image courtesy: Kumudam News

Tags:    

Similar News