ஆசிரியரின் தகாத வார்த்தை: தஞ்சாவூரில் அரசுப் பள்ளி மாணவி தற்கொலை!

அரசுப்பள்ளி மாணவியிடம் தகாத வார்த்தையால் பேசியதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-02-16 01:38 GMT
ஆசிரியரின் தகாத வார்த்தை: தஞ்சாவூரில் அரசுப் பள்ளி மாணவி தற்கொலை!

அரசுப்பள்ளி மாணவியிடம் தகாத வார்த்தையால் பேசியதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவர் தகாத வார்த்தையால் பேசி வந்துள்ளார். இதனால் மனநொந்துபோன மாணவி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதாவது நேற்று (பிப்ரவரி 14) காலை பள்ளிக்குச் சென்ற மாணவி 11.30 மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வகுப்பில் இல்லாததால் ஆசிரியர்கள் மாணவியின் வீட்டிற்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவி தற்கொலைக்கு காரணமாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணை முடிவில் ஆங்கில ஆசிரியர் கணேசன் என்பவர் தகாத வார்த்தையில் மாணவியை திட்டி வந்துள்ளார். இதன் காரணமாகவே மாணவி தற்கொலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய விசாரணை முழுமையாக முடிந்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என பெற்றோர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரிக்க தொடங்கியிருப்பது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News