தமிழகத்திற்கு திடீர் ரெட் அலர்ட்.. இந்த 3 நாட்களில் அதீத கனமழை பெய்யும்.!

தமிழகத்திற்கு திடீர் ரெட் அலர்ட்.. இந்த 3 நாட்களில் அதீத கனமழை பெய்யும்.!

Update: 2020-11-30 13:05 GMT

டிசம்பர் 2,3,4-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்ற காரணத்தால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


அது மட்டுமின்றி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இது புயலாக மாறி, வருகின்ற 2-ம் தேதி இலங்கையில் கரையை கடக்கும் பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 2,3,4ம் தேதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Similar News