சர்க்கரை ரேஷன் கார்டு.. அரசி ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு.. உணவுத்துறை அமைச்சர் புதிய உத்தரவு.!

சர்க்கரை ரேஷன் கார்டு.. அரசி ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு.. உணவுத்துறை அமைச்சர் புதிய உத்தரவு.!

Update: 2020-12-05 15:41 GMT

தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. பொருளில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என மூன்று விதமான அட்டைகள் உள்ளன.

இதில் பெரும்பாலான மக்கள் அரிசி அட்டையாகவே வைத்துள்ளார்கள். இன்னும் சிலரது அட்டைகள் சர்க்கரை அட்டையாகவே வைத்துள்ளனர். சிலர் வெளியூரிலோ அல்லது வெளிமாநிலத்திலோ சில காலம் வசிக்க நேர்ந்தாலோ அல்லது பொருள்கள் வாங்க விரும்பவில்லை என்றாலோ அவர்கள் தங்கள் அட்டையை பொருள் இல்லா அட்டையாக மாற்றி வைத்திருப்பார்கள்.


இந்நிலையில், சர்க்கரை அட்டை வைத்துள்ள பலர் தங்கள் குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றி தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று தமிழக அரசு சர்க்கரை அட்டை வைத்துள்ளவர் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.  தற்போது அரிசி தேவை அதிகரிப்பதால் சர்க்கரை அட்டைதாரர்கள், அரிசி அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News