முதலமைச்சரிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற சூரமங்கலம் மகளிர் போலீசார்.!

முதலமைச்சரிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற சூரமங்கலம் மகளிர் போலீசார்.!

Update: 2020-12-04 08:41 GMT

இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலில் சேலம் மாவட்டம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் 2வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2016ம் ஆண்டும் முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களை மத்திய அரசு தேற்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையமும், 2018ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் காவல் நிலையமும், 2019ம் ஆண்டு மீண்டும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையமும் இந்த டாப் 10 பட்டியலில் இடபெற்றிருந்ததது.


இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் சேலம் மாவட்டம், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் 2வது இடத்தை பிடித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு கிடைத்த விருதினை முதலமைச்சரிடம் காட்டினர்கள் சூரங்கமலம் மகளிர் போலீசார்.

அப்போது சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விருதை காண்பித்து போட்டோ எடுத்துக்கொண்டனர். இதன் பின்னர் முதலமைச்சர் போலீசாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
 

Similar News