26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்: நில அளவையர்களால் பரபரப்பு!

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 26 அம்ச கோரிக்கைகளின் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்.

Update: 2023-02-25 03:00 GMT

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைந்து தற்பொழுது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக நில அளவை களப்பணியாளர்கள், மாநில பொருளாளர் டேன்சி தலைமை தாங்க இந்த போராட்டம் அங்கு நடைபெற்று இருக்கிறது. மாநில செயலாளர் முத்து முனியாண்டி, நாகராஜ், ஜெயந்திரர், மாரிமுத்து, ரகுபதி ஆகியோர் இந்த போராட்டத்திற்கு முன்னிலை வகுத்து இருக்கிறார்கள். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் மற்றும் மாநில துணைத்தலைவர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள்.


களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும் என்றும் நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாவட்ட அளவில் நவீன நில அளவை திட்ட பணிகளை தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சுமார் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.


இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் பல்வேறு நபர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது. உண்ணாவிரத போராட்டம் நீடிப்பு அதிகரிக்கும் என்றும் தற்போது வரை வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Daily Thanthi News

Tags:    

Similar News