சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம் - துவங்கி வைத்த மத்திய இணை அமைச்சர்!

கோவையில் சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் நடைபெறும் சுதந்திர தின கூட்டம் மாரத்தான் நிகழ்ச்சி.

Update: 2022-08-13 10:30 GMT

இந்தியத் திருநாட்டில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தேசபக்திப் உள்ள அனைவரும் அவர்களுடைய வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி மரியாதை செலுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் L. முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் தனியார் கல்லூரி சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் இன்று சுதந்திர தினக் கூட்டம் மாரத்தான் நிகழ்வு நடைபெறுகின்றது. இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் L. முருகன் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 


இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், இந்தியா முழுவதும் தற்போது சுதந்திர தினத்தின் அமுத விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது தெரிவித்தார். மேலும் மக்கள் அனைவரும் மத்திய அரசு இந்த விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும்படியும் செய்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் மாணவ மாணவிகள் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். 


அனைவரும் சுதந்திரத்தின் தேசபக்தி தருணத்தை வெளிக்கொணரும் விதமாக அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடிகளை ஏற்றுக்கொள்ளும் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். மேலும் தமிழகம் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களைத் அந்த மாநிலமாக அறியப்படுகிறது. அந்த வகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பூலித்தேவன் தீரன் சின்னமலை பாரதியார் போன்ற தலைவர்கள் தமிழகத்திலிருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் என்னுடைய தமிழக மண்ணிலிருந்து தான் சுதந்திரத்தை பெற்று உள்ளார். எனவே அவர்களுடைய தியாகங்களை நினைவு கூறும் விதமாக மத்திய அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Input & Image courtesy:News7

Tags:    

Similar News