தனியா சாலையில் செல்போன் பேசிறிங்களா.. அப்போ உங்களுக்கும் இந்த நிலைமைதான்.!

தனியா சாலையில் செல்போன் பேசிறிங்களா.. அப்போ உங்களுக்கும் இந்த நிலைமைதான்.!

Update: 2020-12-26 13:12 GMT

சென்னையில் நடக்கின்ற குற்றச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. அப்படியான ஒரு சம்பவம்தான் இதுவும். அதிலும் கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு பின்னர் வேலைவாய்ப்பு, தொழில்துறை சரிவடைந்த நிலையில், குற்றச் செயல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகரில் இரவு நேரத்தில் சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் ஒரு நபர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென்று கண்இமைக்கும் நேரத்தில் அவரின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இதே போல, இந்த சம்பவம் நடப்பதற்கு முன் செங்குன்றத்தில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் 57 பஸ்சில் பயணம் செய்த ஒருவரிடம் செல்போனை பறித்து விட்டு மர்ம நபர் தப்பி ஓடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று குற்றங்கள் நடைபெறாமல் இருக்க சென்னையில் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News