தேசீய தரவரிசை பட்டியலில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 33வது இடத்திலிருந்து 8 வது இடத்திற்கு முன்னேற்றம்.!

தேசீய தரவரிசை பட்டியலில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 33வது இடத்திலிருந்து 8 வது இடத்திற்கு முன்னேற்றம்.!

Update: 2020-12-10 12:39 GMT

இந்தியாவில் உள்ள 67 வேளாண்துறை சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கான 2019-ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 வேளாண்துறை சார்ந்த பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. ஹரியானா மாநிலம் கர்ணலில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி நிலையம் முதலிடத்திலும், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் 2வது இடத்திலும், டெல்லியில் உள்ள இந்திய வேளாண்துறை ஆராய்ச்சி நிலையம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் 22வது இடத்தையும், நாகபட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் 54வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 33வது இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அப்போது, தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டால் பல்கலைக்கழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்கள் பாதிக்கப்படுவதுடன்,பல்கலைக்கழகத்தைப் பற்றிய பொதுவான மதிப்பீடும் கருத்தும் பாதிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள 67 வேளாண் பல்கலைக்கழகங்களில் 8வது இடத்தையும், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 4வது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே முதலிடத்தையும் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது.

Similar News