பேச வாய்ப்பு அளிக்காததால் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து அ.தி.மு.க. வெளிநடப்பு !
தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டபோது, சபாநாயகர் வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக அரசு மீது முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சராமாரியான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Source: Dailythanthi
Image Courtesy:Dailythanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/13102312/Tamil-Nadu-Assembly-budget-session-begins-ADMK-MLAs.vpf