தமிழக சட்டமன்ற தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு.. நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு.. நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்.!
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் பி.நாயர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நல்ல உடல் நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தேர்தலில் பணிபுரிய வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தலில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
எனவே, முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு வாக்காளர் அடையாள அட்டை, அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகி எழுத்து மூலமான விருப்பக் கடிதத்தினை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.