தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகள் இயக்கம்.!
தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பொதுபோக்குவரத்து இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்று முதல் 23 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்த பின்னரே பேருந்துகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணிப்பதற்காக பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியப் பேருந்து நிறுத்தங்களில் சிறப்பு கண்காணிப்பு பணி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.