செந்தில் பாலாஜி சொல்லும் போதே சுதாரிச்சிருக்க வேணாமா? இனி தமிழகத்தில் மணல் கொள்ளை சூடு பிடிக்கும்! கல்லா கட்டப்போகும் கமிஷன் ஏஜெண்டுகள்!

Tamil Nadu government urged to open more river sand quarries amid huge demand

Update: 2022-01-17 06:37 GMT

லாரிகளுக்கு 16 ஆற்று மணல் குவாரிகளும், மாட்டு வண்டிகளுக்கு 21 ஆற்று மணல் குவாரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், மணல் லாரி உரிமையாளர்கள், இது போதுமானதாக இல்லை என்றும், தேவையை பூர்த்தி செய்ய அதிக குவாரிகள் அமைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

குறைந்த எண்ணிக்கையில் மணல் குவாரிகளை திறப்பது கள்ள சந்தைக்கு வழிவகுக்கும் என்றும், அதிக அளவில் குவாரிகளைத் திறப்பது நல்லது என்றும் கூறுகின்றனர். 2011ல், மாநிலத்தில், 120 குவாரிகள் இயங்கி, மக்கள் எவ்வித போராட்டமும் இன்றி, ஆற்று மணலை பெற்றனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், ஆன்லைன் விற்பனை மூலம் மணல் வழங்கப்பட்டு, அதிகாரிகள் சீனியாரிட்டி பதிவேட்டை பராமரித்து வந்தனர். ஆனால், சமீபத்திய அறிவிப்பில், இந்த அம்சங்களை அரசு தெளிவுபடுத்தவில்லை, என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்ல ராஜாமணி கூறினார்.

அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, பொதுமக்கள் அளிக்கும் ஆன்லைன் விண்ணப்பங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முதலில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மணல் இருப்புக்கேற்ப லாரி உரிமையாளர்கள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முறையில், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் போல் காட்டிக்கொண்டு, காலை நேரத்திலேயே மணல் பெற முடியும். எனவே, அரசு தனது உத்தரவை மறுபரிசீலனை செய்து, மணல் லாரி உரிமையாளர்களுடன் விவாதிக்க வேண்டும்,'' என்றார் செல்ல ராஜாமணி.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.நந்தகுமார் கூறுகையில், குவாரிகள் திறக்கப்பட்டவுடன் ஆற்று மணல் எடுப்பதில் போட்டி ஏற்படலாம், காத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு, இரண்டாம் கட்டமாக கூடுதல் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று நீர்வளத் துறையின் மூத்த அதிகாரி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். பொங்கல் விடுமுறைக்கு பின், மணல் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இதன் அடிப்படையில், மேல் நடவடிக்கைக்காக, தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், குவாரி தொடங்கும் முன், சம்பந்தப்பட்ட இடங்களில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், மணல் அகழ்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.முகிலன் கூறுகையில், ''ஆற்று மணல் இறக்குமதிக்கு பல வாய்ப்புகள் உள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதியில் மணல் குவாரிகள் அமைக்க அரசு ஆர்வம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்னாரே, தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆற்று மணல் அள்ள அனுமதியளிப்பது குறித்து பேசியிருந்தார். அதனை மெய்பிக்கும் வகையில் தற்போதைய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.


Tags:    

Similar News