தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு: துணை முதல்வர் தகவல்.!

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு: துணை முதல்வர் தகவல்.!

Update: 2021-02-23 11:50 GMT

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார். 

கொரோனா தொற்று காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் துணை முதல்வர் பேசியதாவது: முதலமைச்சர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து புகழந்து பேசினார். அனைத்திலும் தமிழகம் சிறப்பாக உள்ளது.

கொரோனா தொற்று காலத்தில்கூட பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழகம் ஈர்த்தது என பேசினார். இதன்பின்னர் நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும், ஏற்படாமலிருக்க பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்றார். தமிழக அரசின் கடன் சுமை அடுத்த ஓராண்டில் ரூ. 5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனக்கூறினார்.
 

Similar News