தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு தி.க மற்றும் தி.மு.க'வினர் கற்கள் மற்றும் கம்புகளை தூக்கி ஆளுநர் வாகனம் முன்பாக வீசினர். இதனால் அப்பகுதியில் போர்க்களம் போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஏப்ரல் 20) டெல்லி செல்கின்றார். இந்த பயணத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம், ஒழுங்கு பற்றி மத்திய உள்துறை அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது. சட்டத்தின்படி ஆட்சி செய்வதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதில் தவறிவிட்டார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi