மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை பயன்படுத்துவதில் தமிழகம் தான் டாப் - ஜல்ஜீவன் திட்டத்தை அதிகம் பயன்படுத்துவது தமிழர்களே!

ஜல்ஜீவன் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவத் கூறினார்.

Update: 2022-10-14 06:07 GMT

ஜல்ஜீவன் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவத் கூறினார்.

ஜல்ஜீவன் திட்டத்தின் தேசிய சராசரியை விட தமிழகத்தில் அதிகப்படியான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் ஜல்ஜீவன் திட்டம் குறித்து அவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய கஜேந்திர சிங் சாகாவத் 2023 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 28 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க கிழக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது வரை 16 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



Source - Polimer News

Similar News