வீடு தேடி வரும் பெட்ரோல் சேவை: தமிழகத்திலும் அறிமுகம் !
முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகமாகியுள்ள வீடு தேடி வரும் பெட்ரோல் சேவைகள்.
தமிழகத்தில் முதல் முறையாக தற்போது பெட்ரோல் சேவைகளை டோர் டெலிவரி மூலம் விநியோகிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் சாப்பாடு முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்திலும் இணையதளம் வழியாக ஆர்டர் செய்து தரப்படுகிறது. அனைத்து மக்களும் இந்த சேவைகளை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த தொற்றுநோய் காலகட்டத்தில் இத்தகைய சேவைகள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் தற்போது பெட்ரோல் சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்ற இடத்தில்தான் இத்தகைய சேவைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுதான் தமிழகத்தில் அறிமுகமான முதல் வீடு தேடி வரும் பெட்ரோல் சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. போன் செய்தால் வீடு தேடி பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் முறை தமிழகத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. .தேனி மாவட்டத்தில் அதிகளவு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக டிராக்டர் மற்றும் மண் அள்ளும் எந்திரம் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பணியின்போது எந்திரங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் வேலை பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்று பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிவரவேண்டிய நிலை ஏற்படும்.
இதனை தவிர்க்க தேனி மாவட்டம் கோம்பையில் கேன்கள் மூலம் பெட்ரோல், டீசலை நேரடியாக வினியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்ணைப்புரம் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் பங்கில் தான் தமிழகத்தின் முதன்முறையாக இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜெர்ரிகேன் என்னும் தனித்துவமான கேனை இதற்காக பயன்படுத்தி வருகின்றனர். கீழே விழுந்தாலும் வாகனம் இதன்மீது ஏறினாலும் உடையாத வலுவான ஸ்டீல் இழைகளின் பிணைப்பால் இந்த கேன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 மணிநேரமும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சேவை தற்பொழுது தேனி மாவட்ட மக்கள் இதனால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சேவையாக இருந்து வருகிறது.
Input: https://www.hindutamil.in/news/tamilnadu/703148-petrol-diesel-door-delivery.html
Image courtesy: wikipedia