உறுப்பினர் அட்டை வரை வைத்திருக்கும், அறிவாலய காதுகளுக்கு எட்டவில்லையா? மதமாற்றத்தால் பலியான சிறுமியின் தந்தை தீவிர தி.மு.க ஆதரவாளர்!

tamil-nadu-schoolgirl-dies-by-suicide-alleges-attempted-forced-conversion-in-video-confession

Update: 2022-01-24 00:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில், மதமாற்றம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தியதால்  17 வயது மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிறித்தவ மதத்திற்கு "மதமாற்றம்" செய்யும் திட்டத்தைத்திற்கு, மறுத்ததில் இருந்து, தனது விடுதி காப்பாளரால் "சித்திரவதை" செய்யப்பட்டதாக கூறினார்.

அந்த வீடியோ கிளிப்பில், தனது விடுதி வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்து மற்ற வேலைகளைச் செய்யச் சொல்லி தன்னை சித்திரவதை செய்யத் தொடங்கினார் என்று சிறுமி கூறினார்.

நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறலாமா என்றும், என் கல்விச் செலவுகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெற்றோரிடம் கேட்டிருக்கிறாள். அப்போதிருந்து, எல்லா வேலைகளையும் செய்ய வைத்தனர் என்று அந்த வீடியோவில் கூறினார்.

தஞ்சாவூரில் உள்ள செயின்ட் மைக்கேல் பெண்கள் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி, அருகில் உள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுமியின் தந்தை முருகானந்தம் கூறுகையில், ஜனவரி 10 ஆம் தேதி தனது மகள் வாந்தி எடுத்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான வயிற்றுவலி இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக தெரிவித்தார்.

தற்போது பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அனிதாவின் மரணத்திற்கு கொடுத்த முக்கியதுவத்தை, தற்போது கொடுக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமியின் தந்தை தீவிர திமுக ஆதரவாளர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை பாஜக நிர்வாகி, கருப்பு முருகானந்தம் தனது, முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட அந்த பதிவில், மதமாற்றத்திற்கு பலியான பள்ளி மாணவியின் தகப்பனாருடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உறுப்பினர் அட்டை இது தீவிரமான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டனாக இருந்தாலும்கூட, அவர் இந்துவாக இருந்தால் திராவிட முன்னேற்ற கழகம் அவரை பார்க்காது சங்கடங்களுக்கு துணை நிற்காது என்பதற்கு மாணவியின் மரணம் ஓர் உதாரணம். அதே நேரத்தில் இறந்த மாணவியின் குடும்பம் சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் தேச விரோதிகளாக இருந்தாலும் பயங்கரவாதிகளாக இருந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் துணை நிற்கும் அமைச்சர்கள் துணை நிற்பார்கள். முதலமைச்சர் துணை நிற்பார். உரிய இழப்பீடு வழங்கப்படும். காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேவை இழந்த குடும்பம் திமுகவைச் சேர்ந்த குடும்பமா என்பது அல்ல அவர்கள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களா என்பது மட்டுமே என்பதை உணரக்கூடியதாக இந்த நிகழ்வு உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Full View

Tags:    

Similar News