தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு.. பொதுமக்களே உஷார்.!
தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் நபராக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் நபராக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை உயர்வை தொடர்ந்து ஆங்காங்கே தற்காலிகமான கொரோனா மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சிலருக்கு கரும்பூஞ்ஜை தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் முதன் முறையாக கரும்பூஞ்ஜை தொற்றக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.