வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் உருவாகின்ற புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-30 11:49 GMT

வங்கக் கடலில் உருவாகின்ற புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில், தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார்.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும். இருந்த போதிலும் திருவள்ளூர் மற்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News