தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50 சதவீத கட்டணம் தள்ளுபடி அறிவித்த மெட்ரோ.!
முதன் முதலாக மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட அன்று சில நாட்கள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளித்தது.
தமிழ் புத்தாண்டு மற்றும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க இன்று முதல் (ஏப்ரல் 13, 14) இரண்டு நாட்கள் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு வழித்தடங்களில் சேவையாற்றி வருகிறது, அவ்வப்போது சில தள்ளுபடிகளையும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்து வருகிறது. அதில் முதன் முதலாக மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட அன்று சில நாட்கள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளித்தது.
இதனிடையே தற்போது தமிழ் புத்தாண்டு மற்றும் யுகாதியை முன்னிட்டு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.