தமிழகத்தில் 12 மணியுடன் அடைக்கப்பட்ட கடைகள்.. வெறிச்சோடிய சாலைகள்.!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால், மதியம் 12 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டது. விதியை மீறி செயல்பட்ட கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2021-05-06 08:09 GMT

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால், மதியம் 12 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டது. விதியை மீறி செயல்பட்ட கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.




 


கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் செயல்படுவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.




 


இந்நிலையில், இன்று முதல் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பகல் 12 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டது. சில கடைகள் அரசு உத்தரவை மீறி செயல்பட்டது. அது போன்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Similar News