தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை உட்பட தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது.

Update: 2021-05-21 11:06 GMT

சென்னை உட்பட தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Similar News