தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்ல் 15 மாவட்டங்களில் அடுத்து வருகின்ற சில மணி நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அடுத்த வருகின்ற சில மணி நேரங்களில் நாமக்கல், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.