23 மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகை கடைகள் இன்று முதல் திறக்க உத்தரவு.!
தமிழகத்தில் இன்று முதல் 23 மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகை கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 23 மாவட்டங்களில் ஜவுளி கடைகள், நகை கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது நகை கடை, ஜவுளி கடைகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜவுளி மற்றும் நகை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. இதனால் அதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். எனவே தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் உடனடியாக ஜவுளி மற்றும் நகை கடைகளை திறக்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகின்றன. மேலும், ஜவுளி கடைகள், நகை கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களிலும் இன்று முதல் ஜவுளி கடைகள், நகை கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி கடைகளை திறக்கவும் அரசு அறிவித்துள்ளது.