தமிழகம்: 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் அதிரடி கைது!
தமிழகத்தில் 3,325 ரவுடிகளை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.;
தமிழகத்தில் 3,325 ரவுடிகளை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் ரவுடிகளை பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்நிலையில், ரவுடிகளை கண்காணித்து கைது செய்வதற்காக 'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி 972 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 1,117 ஆயுதங்கள், 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Kumudham