டவ் டே புயல் எதிரோலி.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!
டவ் தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
டவ் தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது அரபிக்கடலில் டவ் தே புயல் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாக மாறும் நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக இன்று நீலகிரி, தேனி, ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
நாளை 16ம் தேதி முதல் வருகின்ற 19ம் தேதி வரை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது.