தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்து வருகின்ற 24 மணி நேரத்திற்கு சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை முதல் நான்கு நாட்களுக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என கூறியுள்ளது.